Uncategorized
இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில் ஆதீக்கம் செலுத்தி, விளையாட்டை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அணிகளாக திகழ்ந்து வந்தது. அதிலும் வெஸ்ட் இன்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய பேட்ஸ்மேன்கள் தான் அதிகம்.
பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினாலும், வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியை பற்றி பேசினாலே நினைவில் வருவது அவர்களது பவுலர்களும், அவர்களின் அதிவேக பந்து வீச்சும் தான்.ஆஸ்திரேலிய அணியும் பின் நாட்களில் இந்த விளையாட்டில் தனது ஆதிக்கத்தை துவங்கி இப்போது வரை தனக்கென ஒரு தனி இடத்தை கைவசப்படுத்தியே வைத்திருக்கிறது.
வேகப் பந்து வீச்சால் எதிரணியை கலங்கடித்த வெஸ்ட் இன்டீஸ் அணி இப்போது கிரிக்கெட் விளையாட்டை புதிதாக விளையாடி வரும் கத்து குட்டி அணி போல செயல் பட்டு வருகிறது. 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தி வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஈடாக கிரிக்கெட் விளையாடுவதில் நாங்களும் குறைந்தவர்கள் அல்ல என நிரூபித்தது.
அதன் பின்னர் இந்த போட்டியில் இந்திய அணி தனக்கான இடத்தை இன்று வரை உறுதி செய்து வருகிறது. ஆரம்பத்தில் இந்திய அணி என்றாலே பேட்டிங்கிற்கு பெயர் போன அணியாக பார்க்கப்பட்டது.
ஆல்-ரவுண்டர் கபில் தேவிம் பந்து வீச்சுக்கு இணையான பந்து வீச்சாளர்களை தேடியது இந்திய அணி துவக்கத்தில் கவாஸ்கர், டெண்டுல்கர், அசாருதீன், டிராவிட், கங்குலி, லெட்சுணன், சேவாக், மஞ்சிரேக்கர், அஜய் ஜடேஜா, கம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, விராத் கோலி, தோனி, ரோஹித் சர்மா, என அடுக்கிக்கொண்டே போகலாம் பேட்ஸ்மேன்களை.
ஆனால் கபில்தேவ், ஸ்ரீநாத், கும்ளே, ஹர்பஜன் சிங் என ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அளவிலான பவுலர்கள் சொற்பமாக இருந்து வந்த நேரமும் உண்டு.
இது குறித்து கருத்து சொல்லியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஷமி – ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் போன்றவர்களின் வருகைக்கு பிறகு தான் இந்திய அணியின் பவுலிங் பற்றி அதிகமான பேச்சுகள் வரத்துவங்கியிருக்கிறது என்றிருக்கிறார். இந்திய அணி பவுலர்களுக்கான அணியாகவும் மாற இவர்களே காரணம் என்றார்.
பவுலிங்கிலும் இந்திய அணி சிறந்தது என பார்க்க காரணமாக இருப்பவர்கள் இவர்கள் என சொல்லியதோடு பும்ராவை பற்றியும் பேசியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என பும்ராவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.