Connect with us

job news

10 வகுப்பு முடித்து இருக்கீங்களா..? வீட்டிலிருந்தே 21ஆயிரம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பிங்க..!!

Published

on

பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு லிமிடெட் 10 வகுப்பு முடித்தவர்களுக்காகவே அசத்தலான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு லிமிடெட் என்பது இந்தியாவின் முதல் பொது-தனியார் கூட்டு நிறுவனமாகும். இது கடந்த 2004-ஆம் ஆண்டே நிறுவப்பட்டது. இந்த நிலையில், தற்போது பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு லிமிடெட் BCGIL தகுதியான விண்ணப்பதாரர்களை தமிழ்நாடு மாநிலத்தின் அந்தந்த மண்டல அளவில் கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளராக வீட்டிலிருந்து வேலை செய்யவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை 

கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்கு மொத்தமாக 940 காலியிடங்கள் உள்ளது. எனவே, பல காலியிடங்கள் உள்ளதால் இதில் விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் வரும் விண்ணப்பங்களை படித்துக்கொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.

கல்வி தகுதி 

இந்த கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்கு  விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு படித்து அதில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த வேலையில் சேர விண்ணப்பம் செய்ய முடியும்.

சம்பளம்

இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்யும் நபர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக 21,000 வழங்கப்படும். எனவே  10 வகுப்பு முடித்திருந்தாள் போதும் வீட்டில் இருந்து வேலை பார்த்து இவ்வளவு சம்பளம் வாங்கலாம் . எனவே இந்த அசத்தலான வேலை வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பீங்க.

விண்ணபிக்கும் முறை 

இந்த வேலையில் சேர உங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bharatinsurance.org/ க்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை 

இந்த கிராமப்புற பயிர் காப்பீட்டு உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இடம் சென்னையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *