Uncategorized
அவருக்கு பதிலாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்! ஜாகீர் கான் கருத்து!
வெஸ்ட் இண்டீஸ் எனக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி டிராவாக முடிந்தது என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஷ்வின் மொத்தமாக 12 விக்கெட் எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ் மொத்தமாக ஐந்து விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்து தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்படாமல் முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.இதனையடுத்து, அஷ்வினுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என இந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் அருமையாக செயல்பட்டார். அவருடைய பந்துவீச்சு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. அவர் மொத்தமாக 15 விக்கெட் எடுத்திருந்தார். எனவே, சிராஜ்க்கு கொடுத்த அந்த ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும்.
பந்துவீச்சில் மட்டுமின்றி அஷ்வின் பேட்டிங்கிளும் அருமையாக விளையாடினார். ரோஹித், விராட் கோலி போன்ற பெரிய பெரிய வீரர்கள் சதம் முதல் அரைசதம் விளாசிய நிலையில், அஸ்வினும் அரை சதம் விளாசினார். எனவே அவருக்கு கண்டிப்பாக ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.