மத்திய அரசு நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு தங்கத்தின் விலையில் சில நாட்களாகவே அதிரடி மாற்றங்கள் இருந்து வந்தது. பட்ஜெட் தாக்கலான நாளில் இரண்டு முறை விலை குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களுக்கு அதே விலை குறைவு நீடித்தத்து. தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக இந்த விலை இறக்கம் இருந்து வந்தது.
அதன் பின்னர் விலை உயர்வில் சின்ன சின்ன மாற்றங்களை காட்டியது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஆபரணங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதால் தங்கத்தின் மீதான தாக்கமும் இங்கே அதிகரித்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை தான் தங்க விலையை நாள் தோறும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றை விட உயர்ந்துள்ளது. இன்று கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் உயர்ந்து ஆறயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.6480/-) விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை (ரூ.51,840/-) ஐம்பத்தி ஓராயிரத்து என்னூற்றி நாற்பது ரூபாயாக இருந்து வருகிறது.
அதே போலத் தான் வெள்ளியின் விலையிலும் இன்று சிறிய மாற்றம் இருந்தது. நேற்று விற்கப்பட்டதை விட இன்று கிராம் ஒன்றிற்கு எழுபது காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று தொன்னூற்றி ஓரு ரூபாய் எழுபது காசுகளுக்கு (ரூ.91.70/-) விற்பனையாகி வருகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஓராயிரத்து எழனூறு ரூபாயாக (ரூ.91,700/-) உள்ளது. இறங்குமுகத்தை காட்டி வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென ஏறுமுகத்தை நோக்கி செல்வது ஆபரணப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…