Uncategorized
அடடே இப்படி ஆகிப்போச்சே தங்கத்தின் விலை…தொடரும் உயர்வு…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விற்பனை விலை ஆறாயிரத்து நானூற்றி என்பதாக ரூபாயக (ரூ.6480/-) இருந்தது. ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஓராயிரத்து என்னூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.51,840/-)விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி தொன்னூற்றி ஓரு ரூபாய் எழுபது காசுகளாக (ரூ.91.70/-), இருந்தது. இதனால் ஒரு கிலோ பார் வெள்ளி தொன்னூற்றி ஓராயிரத்து எழனூறு ரூபாய்க்கு (ரூ.91,700/-) விற்கப்பட்டது.
தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை மத்திய அரசு பட்ஜெட் அறிவிப்பில் குறைத்திருந்தது. இதனால் தங்கத்தின் விற்பனை விலை சல்லென குறைந்தது. இந்த விலை வீழ்ச்சி நாடெங்கிலும் உள்ள தங்க நகை பிரியர்களை ஆனந்தமடையச் செய்தது. இந்த சந்தோசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். நேற்றும், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் மாற்றங்கள் இருந்து வந்தது. தங்கம் ஏறுமுகத்திலும், வெள்ளியின் விலை இறங்குமுகத்திலும் என இருந்து வருகிறது.
நேற்றை விட இன்று தங்கம் ஒரு கிராமிற்கு நாற்பது ரூபாய் உயர்ந்து ஆராயிரத்து ஐனூற்றி இருபது (ரூ.6520/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி இரண்டாயிரத்து நூற்றி அறுபது ரூபாயாக்கு (ரூ.52,160/-) விற்கப்படுகிறது. வெள்ளி நேற்றை விட கிராமிற்கு எழுபது (70காசுகள்) குறைந்துள்ளது.
நேற்று தொன்னூற்றி ஓரு ரூபாய் எழுபது காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த வெள்ளி இன்று தொன்னூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.91/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஓராயிரம் ரூபாயாக (ரூ.91,000/-)உள்ளது . அடுத்தடுத்து உயர்வு பாதையில் சென்று கொண்டிருக்கும் தங்கத்தின் விலை இப்போது ஆபரணப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.