job news
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…மாதம் இவ்வளவு சம்பளமா..? உடனே விண்ணப்பீங்க.!
இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை 2023-2024 சட்டப்பேரவை அறிவிப்பு எண்.31ன்படி சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், வ,ஊ.சி. நகரில் உள்ள ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தால் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். இதர விவரங்களை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் மற்றும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பணியிடங்கள்:
மருத்துவ அலுவலர் – 2
செவிலியர் -2
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் – 2
வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 35 லிருந்து 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி:
- மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் டிஜிஎன்எம் (நர்சிங் டிப்ளமோ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதிகள் சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in என்கிற இணைய தள முகவரியில் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு விரைவு தபால் அல்லது பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.
- விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
- விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, செயல் அலுவலர், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் எண்.44, இராசப்ப செட்டி தெரு, பூங்காநகர், சென்னை-3
சம்பள விவரம்:
மருத்துவ அலுவலர் பணிக்கு மாதம் ரூ.90,000 சம்பளமாக வழங்கப்படும்.
செவிலியர் பணிக்கு மாதம் ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணிக்கு மாதம் ரூ.6,000 சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து ஜூலை 27ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது,