குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் பேசி இருந்தார். பல முக்கிய விஷயங்களை அவ்வுரை உள்ளடக்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி பேசியதில் இருந்து, குடியரசு தலைவரின் உரை நாட்டு மக்களுக்கு ஊக்கமும், உத்வேகமும் நிறைந்ததாக இருந்தது. 6 தகாப்தங்களுக்கு பிறகு ஒரு கட்சி 10 வருடங்களை தாண்டி ஆட்சியில் இருப்பது அசாதாரண நிகழ்வு. ஆனால் சிலர் அதன் முக்கியத்துவத்தினை புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்.
10 ஆண்டுகளாக நாங்கள் செய்த அர்ப்பணிப்பு பணிகளுக்கு நாட்டு மக்கள் தங்கள் ஆதரவை தந்துள்ளனர். எனது நாட்டு மக்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். பாபா சாகேப் அம்பேத்கர் அளித்த சட்டத்தால் என்னை போன்ற பலர் இங்கு வர முடிந்தது. நடந்து முடிந்த தேர்தல் எங்கள் 10 ஆண்டுகால ஆட்சிக்கு மைல்கல் மட்டுமல்ல.
எதிர்கால தீர்மானங்களுக்கு மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து இருப்பதற்கான அத்தாட்சி. நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். நாடு கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ள வளர்ச்சி வெறும் தொடக்கம் தான். இன்னும் பல படிகள் நாம் வளர இருக்கிறோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாடுப்படுவோம். இந்தியா மூன்றாம் பொருளாதாரமாக மாறும்போது அதன் தாக்கம் அனைத்து துறைகளில் இருக்கும் என பெருமையாக கூறுகிறேன். கொரோனா போன்ற பேரிடர்களை சந்தித்தும் நாடு வளர்ச்சி பாதையில் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: மனித உயிர்களை பலி வாங்கிய கள்ளக்குறிச்சி ‘விஷ சாராயம்’… சற்றுமுன் வெளியான லேப் ரிப்போர்ட்…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…