Connect with us

Uncategorized

நீண்டநாளாக இருந்து வந்த தொப்பை கவலைக்கு அன்னாசி பழம் வைக்கிறது முற்றுப்புள்ளி

Published

on

ஒரு ஆளைப் பார்த்த உடனே எடை போட்டுவிடக்கூடாது என்பதற்கு அன்னாசி பழத்தை உதாரணமாகச் சொல்வார்கள். வெளியே முள் மாதிரி இருக்கும். தொட்டால் குத்தும். அதன் உள்ளே எவ்வளவு இனிப்பான சுவை என்று பாருங்கள்.

அதில் எவ்வளவு சத்துக்கள்? அத்தனையும் உடலுக்கு ரொம்பவே தேவையானவை. இந்த கோடை சீசனில் அன்னாசியை கட்டாயமாக சாப்பிடுங்கள். உங்கள் உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும். அப்படி என்னென்ன பெரிய நன்மைகள் எல்லாம் வந்துவிடப்போகுதுன்னு பார்க்கலாமா…

இயற்கையின் கொடையாக நமக்குத் தந்தது தான் அன்னாச்சி பழம். இதில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன.

இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளைக் கொண்டது அன்னாச்சி பழம் என்பதை மறந்து விடாதீர்கள். இதை சாப்பிடுபவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, கண், காது, பல், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச்சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். ரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்து.

Pine apple

அன்னாச்சி பழம் ரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல் அல்லாமல் மலக்குடலையும் சுத்தப்படுத்துகிறது.

தொடர்ந்து 40 நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.

இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. அன்னாச்சியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

google news