வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களைச் சந்திக்க ஓரிரு நாட்கள் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி முதன்முறையாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்குச் சென்றார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மெய்தி மற்றும் குக்கீ என இருதரப்பு மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடையே பேசுகையில், `நான் இங்கு உங்களின் சகோதரனாக வந்திருக்கிறேன். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்காக உங்களுடன் சேர்ந்து உழைக்கவே இங்கு வந்திருக்கிறேன்’ என்று நம்பிக்கை அளித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, `பிரதமர் மோடி இங்கு வர வேண்டும் என்பதை முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். இங்கு வந்து மணிப்பூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர் காது கொடுத்து கேட்க வேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். என்ன இருந்தாலும் மணிப்பூர் நமது இந்திய ஒன்றியத்தின் பெருமைமிகு அங்கம்தானே… பிரதமர் மோடி, ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். அது மணிப்பூர் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
கடந்த 2023 மே மாதத்தில் நடந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதத்தில் முதல்முறையாக மணிப்பூர் சென்றிருந்த ராகுல், பாரத் ஜோடா யாத்திரைக்காகக் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக சென்றார். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இப்போது மூன்றாவது முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார் ராகுல் காந்தி.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…