பாரதிய கட்சியில் இருக்கும் அமைச்சர்களே அவர்களது ஆட்சியில் பயத்தோடே தான் இருந்து வருகிறார்கள் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். அதோடு தாமரை வடிவிலான சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் அச்சத்திலேயே இருக்கும் வண்ணத்தில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு அன்மையில் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் பட்ஜெட் மீதான தங்களது கடுமையான விமர்சனங்களையும், சாடல்களையும் சொல்லி வந்து படியே உள்ளனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். தாமரை வடிவில் சக்கர வியூகம் அமைத்து மக்களை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்றார்.
அச்சம் என்னும் சக்கர வியூகத்தை அமைத்து மக்களை பயமுறுத்தி வருகின்றனர் மோடி, அமித் ஷா இருவரும் எனவும், மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டது போல் மோடி மற்றும் அமீத் ஷாவால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கி உள்ளனர் என்றார். சக்கர வியூகம் அமைத்து நாட்டு மக்களை கொள்ளை அடித்து வருகின்றனர் என தனது கடுமையான குற்றச்சாட்டினையும், விமர்சனத்தையும் முன் வைத்து பேசினார்.
நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் இந்த ஆட்சியில் அச்சத்தில் உள்ளனர். அதே போல தான் இளைஞர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை உள்ளது என்றார். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அதன் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும் போது சொல்லியிருந்தார் ராகுல் காந்தி.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…