சென்னை பெரிய மேடு பகுதியைச் சேர்ந்து பெண் கல்லூரியில் படித்து வந்து கொண்டிருக்கிறார். கல்லூரி முடிந்து வந்ததும் மாலை நேரத்தில் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலருக்கு டியூசன் எடுத்து வந்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த பதினேழு வயது மாணவர் ஒருவர் டியூசனில் சேர்ந்திருக்கிறார். டியுசன் வகுப்பிற்கு தவறாமல் வந்திருக்கிறார் அந்த மாணவன்.
இப்படியே போயிக்கொண்டிருந்த போது மாணவனுக்கும், டியூஷன் எடுத்த வந்த கல்லூரி மாணவிக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. இவர்கள் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
காதலுக்கு கடுத்த எதிர்ப்பு கிளம்பியதால் தன்னிடம் படிக்க வந்த மாணவரை விட்டு பிரிந்திருக்கிறார் டியூசன் டீச்சரான கல்லூரி மாணவி. தங்களது எதிரியாக வந்த மாணவியின் பெற்றோர்களை பழி வாங்க நினைத்திருக்கிறான் அந்த மாணவன்.
மாணவன் டூ-கே கிட் என்பதால் பழி வாங்கிய விதத்தில் ட்ரெண்டை புகுத்தியுள்ளான். கேஷ் ஆன் டெலிவர் முறையில் ஆன் -லைன் மூலம் பொருட்களை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஆர்டர் போட்டு வந்திருக்கிறான்.
ஆர்ட்ர் டெலிவரி செய்ய வந்த நபர்களிடம் தாங்கள் ஆர்டர் ஏதும் செய்யவில்லை என மாணவியின்பெற்றோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ரேபிடோ,ஓலா வாடகை வாகணங்களை எழுபத்தி ஆறு முறை புக் செய்திருக்கிறான். மாணவியின் உயிரிழந்து விட்டதாக வலைதளங்களில் செய்தியை வலம் வர விட்டிருக்கிறான்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்து வந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையின் உதவியை நாடியிருக்கிறார்கள். புகாரின் மீது விசாரணை நடத்திய காவல் துறையினர் மாணவியை காதலித்து வந்த டியூசன் வகுப்பு மாணவன் தான் இந்த செயல்களில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்து சொல்லியிருக்கின்றனர்.
மாணவியின் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் கொடுப்பதற்காகவே மாணவன் இப்படிச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மாணவனின் வயதை காரணமாக கொண்டு உளவியல் ரீதியாக அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு பெற்றோருடன் மாணவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…