தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் தமிழ்நாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மீன்கள் இங்கு பதப்படுத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆலையில் நேற்றிரவு 11 மணியளவில் அம்மோனியா சிலிண்டரில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அம்மோனியா வாயு ஆலை முழுவதும் பரவிய நிலையில், அதை சுவாசித்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 21 பேர் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருக்கிறார்கள்.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட அந்தப் பெண்கள் அனைவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதியம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…