Uncategorized
வேற லெவல் தான் போங்க…வேலை இல்லேன்னா குற்றாலத்துக்கு இன்னைக்கு வாங்க…
தமிழ் நாட்டில் தென் மேற்கு பருவ மழை காலம் துவங்கி விட்டாலே பலரின் நினைவிற்கு வரக்கூடிய சுற்றுலாத் தளம் குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்தின் தற்போதைய அடையாளம் தென்காசி மாவட்டமாக மாறியுள்ளது.
மிக அதிகாமாக பார்த்தால் இங்கு சீசன் இருக்கும் காலம் மூன்று முதல் நான்கு மாதங்களாகவே இருக்கும். அதன் பின்னர் தமிழகத்தின் அடுத்த பருவ மழை காலமான வட கிழக்கு பருவ மழை நேரத்தில் இங்குள்ள அருவிகளில் மீண்டும் தண்ணீர் விழத் துவங்கும்.
இப்படி தென் மாவட்டத்தில் மட்டுமல்லாது, தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். கடந்து சில நாட்களாகவே குற்றாலத்தின் சீசின் உச்ச கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பொதுவாகவே ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும் தமிழகத்தில்.
இது குற்றால அருவிகளிலில் விழும் தண்ணீரை பண்ணீர் போல மாற்றி சாரலாக தூவப்படுவதன் காரணமாகவும் இருந்து வருகிறது. நேற்றைய வார இறுதி என்பதால் குற்றாலத்தை சுற்றுலாப் பயணிகள் சூழ்ந்தனர். குற்றாலத்தின் பிரதான அருவிகளாக பார்க்கப்படுவது ஃபைவ் ஃபால்ஸ், பழைய குற்றாலம், மெயின் அருவி.
இந்த மூன்று அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதே போலத் தான் இன்றும் குற்றாலத்தின் சூழல் ரம்மியமாக இருந்தது.
இன்று காலை பத்து மணி நிலவரப்படி குற்றாலத்தில் வெயில் மிதமாகவே இருந்து வந்தது. அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் நேற்றை விட கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.