Uncategorized
வீடியோ காலில் AR Filter-கள்… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி சார்ந்த அம்சங்களை வீடியோ கால் சேவையில் புகுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் புது அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த அம்சம் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன் இன்ஸ்டால் செய்திருக்கும் டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்குமான வெர்ஷனில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய அம்சம் கொண்டு வீடியோ கால் பேசும் போது பயனர் முகத்தில் அழகிய ஃபில்ட்டர்களை வழங்குகிறது. இது பயனர்கள் வீடியோ கால் பேசும் போதே ரியல் டைமில் தங்களது முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏராளமான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஃபில்ட்டர்களை வைத்துக் கொள்ளச் செய்கிறது. இதை கொண்டு வீடியோ கால் பேசுவோர் தங்களுக்கு பின் என்ன இருக்கிறது என்பதை மறைக்கும் வசதி, பின்னணியில் இருப்பதை நீக்கிவிட்டு அவர்கள் தேர்வு செய்யும் பேக்கிரவுண்ட் படங்களை வைத்துக் கொள்ள உதவுகிறது.
இத்துடன் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் இருந்து பேசும் போதும் முகம் தெளிவாக தெரிய செய்வதற்காக லோ-லைட் மோட் வசதி வழங்கப்படுகிறது. இது பேசும் போது வெளிச்சத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். மேலும் புது அப்டேட்டில் வாட்ஸ்அப்-இன் டச்-அப் மோட் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயனர் முகங்களில் மென்மையாக காட்சியளிக்க செய்யும் வகையில் மாற்றும்.