Uncategorized
பறிபோன வாய்ப்பு?…கண்ணீர் வீட்டு அழுத கவுண்சிலர்…
தமிழகத்தின் சட்ட மன்ற தேர்தலில் மட்டுமன்றி உள்ளாட்சி தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மையுடன் அக்கட்சியை சேர்ந்தவர்களே மேயர், நகர் மன்ற பெருந்தலைவர் என பல்வேறு பதவிகளை பெற்றனர் கூட்டணியைமைத்து தேர்தலை சந்தித்த போதும்.
இந்நிலையில் கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளின் மேயர்களாக இருந்தவர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்தனர். நெல்லையில் கவுண்சிலர் கிட்டு (எ) ராம கிருஷ்ணன் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போல கோயம்பத்தூர் மேயராக இருந்த கல்பனா தனது மேயர் பதவியை அன்மையில் ராஜினாமா செய்தார்.
இதனால் புதிய மேயரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடத்தப்பட்ட நிலையில் மாநகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு கவுண்சிலர் ரெங்கநாயகியை மேயர் வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவித்தது.
புதிய மேயர் நாளை தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த சூழலில் அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் முத்துசாமி தலைமையில் கவுண்சிலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை சுகுனா மண்டபத்தில் வைத்து நடந்தது. இதில் திமுக பெண் கவுண்சிலர் மீனா லோகுவும் பங்கேற்றார். மேயர் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த மீனா லோகு தனக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் கண்ணீர் விட்டு அழுதார்.
ரெங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருத்தத்துடன் தனது காரில் ஏறிய மீனா லோகு கண்ணீர் விட்டு அழத்துவங்கினார். அழுத படியே மீனா லோகு தனது காரில் பயணித்த காட்சிகள் இப்போது வைரலாக பரவி வருகிறது.