Connect with us

World News

கண்ணாடியைத் திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும் – மக்களை திசைதிருப்ப தேசிய கீதத்தை மாற்றிய நாடு!

Published

on

நைஜீரியாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப நாட்டின் தேசிய கீதத்தை மாற்றும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் போலா தினுபு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் தலைமையிலான ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், நாட்டின் பணவீக்கம் 28 ஆண்டுகளில் இல்லாத அளவாக 33.20% ஆக உயர்ந்திருக்கிறது.

இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப்போக்கே இந்த நிலைக்குக் காரணம் என நாட்டின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாக போலா தினுபு தலைமையிலான அரசு, தேசிய கீதத்தை மாற்றும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியிருக்கிறது.

சுதந்திரமடைந்த காலம் முதலே நைஜீரியாவின் தேசிய கீதமாக இருந்த `Arise O’ Compatriots’ பாடலுக்குப் பதில் இனிமேல், `We Hail Thee’ பாடல் தேசிய கீதமாகத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது நைஜீரியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

மாணவர்களுக்கான கல்வி விசா!.. கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலிய அரசு

Published

on

இந்தியாவில் படிக்க விரும்பாத அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்கா, லண்டன், கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் அப்படி படித்துவிட்டு இந்தியா திரும்பி இருக்கிறார்கள்.

அதில் பலரும் வெளிநாடுகளியே கூட வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகி இருக்கிறார்கள். பெரும்பாலும், ரஷ்யாவில் மருத்து படிப்பை படிப்பவர்கள் மிகவும் அதிகம். அதேபோல், ஆஸ்திரேலிய நாட்டுக்கும் இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் செல்கிறார்கள். இந்நிலையில், மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசி இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இப்போது பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் கல்வி விசா எடுக்க வேண்டுமெனில் இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம் தேவைப்பட்டது. இப்போது ஆண்டனி அல்பனேசி அரசு 89 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

இதன் மூலம் அதிக அளவிலான வெளிநாடு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதை தடுக்கமுடியும் என ஆஸ்திரேலிய அரசு நினைக்கிறது. மேலும், பார்வையாளர் மற்றும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விஷா கேட்டு விண்னப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா உயர்த்தியுள்ள விசா கட்டணம் அமெரிக்கா, கனடா நாட்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

latest news

பாகிஸ்தானில் போட்டு பொளக்கும் வெயில்!. 4 நாட்களில் 450 பேர் மரணம்…

Published

on

பொதுவாக வெயில் காலம் என்றாலே வெயிலின் வெப்பத்தால் வயது முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் நடக்கும். அதனால்தான் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. குறிப்பாக கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கடந்த 4 நாட்களில் வெயிலும் தாக்கத்தால் 450 பேர் உயிரிழந்திருப்பதாக ஒரு தன்னார்வ நிறுவனம் சொல்லி இருக்கிறது. கராச்சி என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த சனிக்கிழமை முதலே கராச்சியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது.

3வது நாளிலும் வெயில் குறையாமல் 40 டிகிரி செல்சியசிஸை தாண்டி வெப்பம் நிலவியது. சில இடங்களில் வெப்பக்காற்றும் வீசியது. குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக வெப்பம் காணப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் 427 உடல்களை பெற்றதாக எதி அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. அதேபோல் மூன்று மருத்துவமனைகளில் இருந்து சித்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை பெற்றதாக கூறியிருக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எதி டிரெஸ்ட்டின் தலைவர் ‘கராச்சியில் 4 சவக்கிடங்குகள் செயல்படுகிறது. இப்போது எங்களின் சவக்கிடங்கில் உடல்களை வைக்க முடியாத அளவுக்கு பிணங்கள் நிரம்பி விட்டது. புதிய உடல்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Continue Reading

latest news

மது, கஞ்சாவால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் பேர் மரணம்!.. சுகாதார மையம் தகவல்!..

Published

on

மது, சிகரெட், கஞ்சா போன்ற கெட்டப் பழக்கங்கள் பல வருடங்களாகவே பலருக்கும் இருக்கிறது. துவக்கத்தில் சுவாரஸ்யத்திற்காக பழகும் பழக்கம் நாளடைவில் அதற்கே அடிமையாகி விடும் நிலையும் ஏற்படுகிறது. பல வருடங்களாக இந்த பழக்கத்தை மேற்கொள்ளும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமாவதும் நடந்து வருகிறது.

இதில், அதிகம் இறந்து போவது ஆண்கள்தான். ஏனெனில், அவர்கள்தான் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதும் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் வருடத்திறு சுமார் 32 லட்சம் பேர் மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதில், மதுவால் மட்டுமே 26 லட்சம் இறக்கிறார்கள் எனவும், போதைப்பொருட்களால் 6 லட்சம் பேர் இறக்கிறார்கள் எனவும் சொல்கிறது அந்த அறிக்கை. உலகம் முழுவதும் மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும், கஞ்சா குடிப்பதால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரை விடுகிறார்கள்.

இதில், குறைவான வருமானம் பெறும் நாடுகளிலும் அதிக மக்கள் மதுவால் உயிரை விடுகின்றனர். அதேநேரம் அதிக வருமானம் பெறும் மக்கள் வசிக்கும் நாடுகளில் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது. 2019ம் வருடம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்தான் உலக சுகாதார மையம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.

Continue Reading

latest news

35 கோடி பரிசு விழுந்ததால் அதிர்ச்சியில் மரணம்!. அதிர்ஷ்டம் அடிச்சும் அனுபவிக்க முடியாத சோகம்!..

Published

on

அதிர்ஷ்டம் என்பதை எல்லோரும் விரும்புவார்கள். அதனால்தான் சுலபமாக பணம் கிடைக்கும் விஷயத்தை நோக்கி பலரும் ஓடுகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இங்கே லாட்டரி டிக்கெட், குதிரை ரேஸ், கிரிக்கெட் பெட்டிங்ம், சீட்டாட்டாம் என சில விஷயங்கள் இருக்கிறது. பல கிளப்கள் இருக்கிறது.

ஆனால், வெளிநாடுகளில் பல வகையான சூதாட்டங்கள் இருக்கிறது. இதில் கேசினோ என்பது மிகவும் பிரபலம். நிறைய பணம் கட்டி விளையாட வேண்டும் என்பதாலும் பெரும் பணக்காரர்கள் அதாவது கோடீஸ்வரர்கள் விளையாடும் சூதாட்டம் இது. இதில், பல கோடி பணமும் வரும். பல கோடிகள் கையை விட்டும் போகும்.

எல்லாவற்றையும் ஏற்கும் மனநிலை வேண்டும். அப்போதுதான் கேசினோ போன்ற சூதாட்டங்களை ஆட முடியும். இந்நிலையில், இந்த சூதாட்டத்தில் கிடைத்த வெற்றி ஒருவரின் உயிரையே பறித்திருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் நேற்று மரினா பே சாண்ட்ஸ் கேசினோவுக்கு விளையாட போனார்.

முடிவில் 4 மில்லியன் டாலர்களை வென்றார். இந்திய மதிப்பில் 35 கோடி. அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே கீழே சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனாலும், அவர் கண் விழிக்கவில்லை. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

https://x.com/itisprashanth/status/1805643862708564450

Continue Reading

latest news

இதுல ஒரு ரகசியமும் இல்ல…. 12வது குழந்தையை வரவேற்கும் எலான் மாஸ்க்

Published

on

By

டெக் உலக பில்லியனரான எலான் மாஸ்க், தனது 12-வது குழந்தையை வரவேற்றிருக்கிறார்.

உலக அளவில் மக்கள் தொகை குறைந்துவருவதாக அவ்வப்போது பேசி தனது கவலையை வெளிப்படுத்துவதை எலான் மஸ்க் வாடிக்கையாகக் கொண்டிருப்பவர். இந்தநிலையில், அவருக்கு 12-வதாக ஒரு குழந்தை பிறந்திருப்பதை ப்ளூம்பெர்க் இதழ் உறுதி செய்திருந்தது.

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்தின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஷிவான் ஜில்ஸ்தான் குழந்தையின் தாய். `நீங்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எலான் மஸ்க் விரும்புகிறார்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த செய்தி வைரலாகப் பரவியது.

தனக்கு 12-வதாகக் குழந்தை பிறந்திருப்பது ரகசியம் அல்ல என்று குறிப்பிட்டிருக்கும் மஸ்க், இதுகுறித்து தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கென பிரத்யேகமான பிரஸ் ரிலீஸ் கொடுப்பது விநோதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், குழந்தையின் பாலினம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Continue Reading

Trending

Exit mobile version