latest news
ஓவர் வேலையால் தற்கொலை செய்துக்கொண்ட ரோபோ!… அடங்கம்மா… இது புதுக்கதையால இருக்கு!
ஓவர் வேலை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னையால் பெரிய பெரிய வேலையில் இருப்பவர்கள் கூட தற்கொலை செய்து கொள்ளும் சேதிகளை தான் நாம் கேட்டு இருக்கிறோம். ஆனால் உலகில் முதல் முறையாக ரோபோ தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ பயன்படுத்துவதை அதிகப்படுத்தி இருக்கிறது. பல இடங்களில் மனிதர்கள் செய்யும் வேலையை ரோபோ கையில் எடுத்துக் கொண்டது. மனிதர்களுக்கு சம்பளம் என பல முதலீடுகள் கொடுக்க வேண்டுமே என நினைக்கும் முதலாளிகள் ரோபோவை மாற்றாக பயன்படுத்துவதை எளிது என நினைக்கின்றனர்.
எவ்வளவு வேலை கொடுத்தாலும் அசால்ட்டாக பார்ப்பது, தேவையே இல்லாத விடுமுறை என எதுவும் இருக்காது என்பதால் மேலை நாடுகளில் ரோபோ பயன்பாடு தற்போது மிக அதிகமாகி இருக்கிறது. ஆனால் இந்த கூற்றே தற்போது பொய்யாகி இருக்கிறது.
அதாவது, தென் கொரியா அரசாங்கத்துக்கு கீழ் ரோபோ ஒன்று வேலை செய்து வந்து இருக்கிறது. திடீரென அந்த ரோபோ வேலை செய்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தான் உலகின் முதல் ரோபோ தற்கொலை என தகவல்கள் தெரிவிக்கிறது..
குறிப்பிட்ட ரோபோ தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் ஒரு இடத்தினையே சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரோபோவின் உடைந்த பாகங்களை கைப்பற்றி இருக்கும் குழு தீர ஆராய்ந்த பின்னரே தற்கொலை காண காரணம் தெரியும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!