பிராங்க் செய்யும் யூடியூபர்களை கண்டால் பெரும்பாலான மக்கள் கடுப்பில் இருப்பது தான் உண்மை. ஆனால் ஐரோப்ப நாடாளுமன்ற தேர்தலில் யூடியூபர் ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூடி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
ஃப்டியாஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் ஃப்டியாஸ் பனாயியோடோ. வித்தியாசமான டாஸ்குகளை செய்து பிரபலமடைந்த ஃப்டியாஸ் 2 மில்லியன் பாலோயர்கள் தன்னுடைய யூடியூப்பில் வைத்து இருக்கிறார். யூடியூப் மட்டுமல்லாமல் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாவிலும் பிரபலமானவர்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 720 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஃப்டியாஸ் ஐரோப்பிய கிழக்கு பகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆச்சரியப்படும் வகையில் அங்கிருந்த பிரபல வேட்பாளர்களை தோற்கடித்தார்.
24 வயதாகும் ஃப்டியாஸ் 19.4 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மத்திய தரைக் கடல் தீவு பகுதியின் முன்னணி கட்சியின் வாக்கு வங்கியை விட அதிகமாக பெற்று மூன்றாவது அதிக வாக்கு பெற்ற தனிநபராகி இருக்கிறார்.
அரசியல் பின்புலம் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் மட்டுமே பிரசாரம் செய்து இத்தனை வாக்குகளை ப்டியாஸ் வாங்கி இருக்கிறார். சமூக வலைத்தள பிரபலத்தின் அடுத்த கட்டம் இது என்றும் இது பிரச்னையாக இருக்கும் இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…