india
மதுபான கொள்கை வழக்கு…குற்றப்பத்திரிக்கை தாக்கல்…கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு…
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முதல் – அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த வழக்கினை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய சதிகாரரே அரவிந்த் கெஜ்ரிவால் தான் என சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவாலின் ஜாமீன் விசாரணை இன்று டெல்லி கோர்டில் விசாரணைக்கு வந்தது.
கெஜ்ரிவாலின் நீதி மன்றக் காவல் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த பன்னிரெண்டாம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியிருந்த பட்சத்திலும் வேறு ஒரு வழக்கில் சி.பி.ஐ. பிடியில் சிக்கிய கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்ததால் கெஜ்ரிவால் சிறை வாசத்திலிருந்து வெளிவர முடியவில்லை.
இதனால் கெஜ்ரிவால் தொடரிந்து சிறை வாசத்திலேயே இருந்து வருகிறார். அவர் தொட்ரபுடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் தான் அவர் வெளியே வர முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் கெஜ்ரிவால் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.