india
சாதனை ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்…பெருமைப் படுத்திய ஜனாதிபதி…
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்துள்ள துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனி நபர் மற்றும் குழுப்பிரிவில் பதக்கம் வென்று அசத்தியுள்ள வீரர், வீராங்கனையை இந்திய ஜனாதிபதி மர்மூ பாராட்டியுள்ளார். கடந்த வாரம் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் வண்ணமயமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஒலிம்பிக் போட்டிகள்.
ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமையை காட்டி வருகின்றனர். இந்திய வீரர்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாரீஸில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் 10 மீட்டர் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனை மனு பாக்கர். இதே போல மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது பதக்ககத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த முதல் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். மனு பாக்கரின் இந்த சாதனையை நாடே உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்தியாவின் இந்த சாதனைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைபடுத்தினாள், அவருக்கும் சரப்ஜோத் சிங்கிற்கும் எதிர்காலத்தில் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்தியனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி திரவுபதி மர்மு.