Connect with us

latest news

போதைப் பொருள் கடத்தல்…அதிரடி காட்டிய திமுக தலைமை…

Published

on

DMK

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து அறுபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ஓழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தியது தமிழக அரசு. இதே போலத் தான் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருட்களைக் கடத்தி அன்மையில் கைது செய்யப்பட்டார். வழக்கில் கைது செய்யப்பட்டதும் அவரை கட்சியை விட்டு நிரந்திரமாக நீக்கி உத்தரவிட்டது திமுக தலைமை.

ராமநாதபுரம்  மாவட்ட சிறுபானிமையினர் நல உரிமைப் பிரிவின் துணைத்தலைவரக இருந்த செய்யது இப்ராஹிமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் துரை முருகன்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. தனிப்படையமைத்து தீவிர கடத்தல் தடுப்பு பணி நடத்தப்பட்டு வந்த போது பஸ் நிலையத்தில் பயணி போல நின்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசல் ரஹ்மான் என்பவரை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Durai Murugan

Durai Murugan

அவரிடமிருந்தது 5.979கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் மற்றும் ஏழு லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து சென்னயை சேர்ந்த மன்சூர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி செய்யது இப்ராஹிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சர்வதேச சந்தையில் எழுபது கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதலும் செய்யப்பட்டது.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் துரை முருகன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செய்யது இப்ராஹிமை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவரோடு கழகத்தினர் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளபடுவதாக தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளார் துரை முருகன்.

google news