latest news
சட்டப்பேரவையில் குட்கா எடுத்து வந்த விவகாரம்… அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்…
தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மீண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
முந்தையை அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்திற்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற எம் எல் ஏக்கள் குட்காவை எடுத்துச் சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்திருந்தனர். அதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் திமுக எம்எல்ஏக்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, இந்த மேல்முறையீட்டு வழக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கினை போல ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதற்காக தொடுக்கப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவரின் பதவிக்காலம் முடிந்த உடனே அந்த ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும். அதுபோல, முடிவு பெற்ற ஆட்சியில் தொடரப்பட்ட நிலுவையில் இருக்கும் மசோதாக்கள், உரிமை மீறல் நோட்டீஸ் ஆகியவைகளும் காலாவதியாகி விடும் என வாதிட்டார்.
தற்போது புதிய சட்டமன்றம் இருப்பதால், இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் மசோதாக்கள் காலாவதியாகலாம் உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதி ஆகும்? எனக்கு கூறி வழக்கின் தீர்ப்பை இன்று (31ஆம் தேதி) தள்ளி வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், உரிமை மீறல் காலாவதியாகும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உரிமை மீறல் குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும். பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.