Uncategorized
கனவாக நீர்த்துப்போகச் செய்யும் திமுக அரசு…கடுமையான கண்டனத்தை தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்…
தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற முப்பத்தி எட்டு மாதங்களில் மூன்று முறை மின் கட்டண உயர்வு, இரு மடங்கு வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வு.
பல முறை பால் பொருட்களின் விலை உயர்வு, பல மடங்கு கட்டண உயர்வு விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு என்று விடியா திமுக அரசு தமிழக மக்களை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது என் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்டன அறிக்கையில் “காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கேற்ப காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்று ஏங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில் கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது இந்த விடியா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என் சொல்லியிருக்கிறார்.
கட்டணங்களை எல்லாம் செலுத்தி சிரமப்பட்டு வீட்டு மனை வாங்கியவர்கள் வீடு கட்ட முயற்சிக்கும் போதும் வீடு கட்டுவதற்கான வரை பட அனுமதிக் கட்டணங்களை வானளாவ உயர்த்தி முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது, இந்த அரசு.
வீடு கட்டுவதற்கான வரபட அனுமதிக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழக மக்களின் ‘சொந்த வீடு’ என்ற எண்ணத்தை கனவாக நீர்த்துப்போகச் செய்துள்ள நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.