உச்சிக்கு போன போதை…கலவரம் செய்த கணவன்…கைது செய்த காவல் துறை… ஆதேஷ் நகர் பினய்குமார்.

தலைக்கேறிய போதையில் மனனைவியிடம் தகராறு செய்த கணவரை காவல் துறை கைது செய்துள்ளது. மனைவி கொடுத்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் அந்த பெண்ணின்  கணவர். தாக்க முயன்ற நபரை கட்டுப்படுத்திய காவல் துறையினர், அந்த நபரை கைது செய்து அவர்கள் பாணியில் விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் ஆதேஷ் நகரில் மனைவியுடன் வசித்து வருபவர் பினய் குமார். குடிப்பழக்கம் கொண்டிருந்த பினய் குமார் மது அருந்திய நிலையில் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த தனது மனைவி மகாலெட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்கு வாதம் முற்றிப்போன நிலையில் மனைவி மகாலெட்சுமியை தாக்க முற்பட்டதாக சொல்லப்பட்டது.

Drunken man
Drunken man

கணவர் ஆதேஷ் குமாரின் இந்த செயலால் கோபமடைந்த மனைவி மகாலெட்சுமி காவல் துறைக்கு போன் செய்திருக்கிறார்.

புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த போலீசார் பினய் குமாரின் அருகே சென்றிருக்கின்றனர். உச்சக்கட்ட போதையில் இருந்த பினய் குமார், காவல் துறையினருடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகி விசாரிக்க வந்த காவல் துறையினர் மூன்று பேரில் ஒருவரை பினய் குமார் தாக்கியிருக்கிறார்.

இந்த தாக்குதலால் கண் இமைப்பகுதியில் காயமடைந்த காவலருக்கு மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கப்பட்டது. இதனிடையே காவலரை தாக்கிய  பினய் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார் போதையை தெளிய வைத்து, அவர்கள் பாணியில் விசாரணை நடத்தியிருக்கின்றனர். பினய்குமார் போதையில் காவல் துறையினருடன்  தகராறு செய்த வீடியோ இப்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment