india
என்னை கொன்றாலும் பரவாயில்லை…கால்பந்து வீரரின் துணிச்சல் பேச்சு…
உலக அரங்கில் நடந்து வரும் பல விதமான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது ஆளுமையை ஒரு சில விளையாட்டு பிரிவிலே காட்டி வருகிறது. ஒரு காலத்தில் யாரும் நெருங்க முடியாத அசுர பலத்தோடு ஹாக்கி விளையாட்டில் உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது இந்தியா, நாளடைவில் நிலைமை தலை கீழாகி போனது.
கிரிக்கெட் விளையாட்டில் தற்போது முழு பலத்தையும் காட்டி வருகிறது இந்தியா. அதே நேரத்தில் துப்பக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிட்டன், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் முன்னேற்றப் பாதையில் வலம் வரத் துவங்கியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதில் தடுமாற்றத்தை காட்டி வருகிறார்கள் இந்திய வீரர்கள்.
துப்பாக்கி சுடுதல் தவிர இதர விளையாட்டுகளில் தங்களின் திறமையை நிலைநிறுத்த கடுமையான போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கால்பந்து முன்னாள் வீரர் சுனில் சேத்ரி 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. நூற்றி ஐம்பது கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு நாடு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லைஎன்பது உண்மை கிடையாது. நம்மால் நூற்றி ஐம்பது பேரின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க முடியவில்லை என்பது தான் உண்மை.
சீனா, அமெரிக்கா, ஜெர்மனி. ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் ஒலிம்பிக்கில் சிறப்பாக பங்காற்றுகின்றனர். நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை, ஒருவரின் திறமையை அடையாளம் கண்டு அதை சரியான நேரத்தில் வளர்ப்பதில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம். இப்படி சொல்வதனால் மக்கள் என்னை கொன்றாலும் பரவாயில்லை. ஆனால் இது தான் யதார்த்தம் என பேசியிருந்திருக்கிறார் சுனில் சேத்ரி.