Cricket
ஐபிஎல்-ல இதை மாத்துங்க.. காவ்யா மாறன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் தொடரை ஒட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய காவ்யா மாறன், அணிகள் குறைந்தபட்சம் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அணியில் மிகமுக்கிய வீரர்கள் மற்ற அணிகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இதேபோன்று ஏலத்திற்கு வரும் தங்கள் அணி வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக வழங்கப்படும் ரைட்-டு-மேட்ச் (RTM) ஆப்ஷன்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வீரர்கள் மற்றும் RTM ஆப்ஷன்களில் அதிக தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்கவைத்தல், இரண்டு RTM-கள் அல்லது ஆறு தக்கவைத்தல்கள், அல்லது ஆறு RTM-கள் என இந்த விஷயத்தில் அதிக ஆப்ஷன்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதை அணிகள் வீரர்களுடன் ஆலோசனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று காவ்யா மாறன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சென்னை அணியும் வீரர்கள் தக்கவைத்துக் கொள்வது தொடர்பாக வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடாமல் உள்ள வீரர்களை அன்கேப்டு வீரர்களாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் சென்னை அணியில் எம்எஸ் டோனியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.