Cricket
தோற்றும் இலங்கை வீரரை நெகிழ செய்த கோலி
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு விராட் கோலி செய்த காரியம் இலங்கை வீரரை நெகிழ செய்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ஜெர்சியில் கையொப்பமிட்டு, இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்-க்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நேற்றைய போட்டிக்கு பிறகு, விராட் கோலி இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்-க்கு பரிசளித்தார். இந்த போட்டியில் இலங்கை அணி 110 ரன்களில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் 82 பந்துகளில் 59 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளில் குசல் மெண்டிஸ் மொத்தமாக 103 ரன்களை அடித்திருந்தார். இதே தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மூன்று போட்டிகளிலும் சேர்த்து 58 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பேட்டர்கள் சோபிக்காததால், இந்திய அணியை தொடரில் தோல்வியை தழுவியது. கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் துனித் வெல்லலகே ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இவர் தவிர ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் மஹேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னான்டோ 1 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டும் ரன்களை அடிக்க போராடினர்.