Connect with us

Cricket

ஆக்ரோஷ Celebration, மனம்திறந்த டிராவிட்

Published

on

டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை கையில் வாங்கியதும், அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொண்டாடிய விதம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்ற தருணங்களில் கூட அத்தகைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில்லை.

எனினும், பார்படோஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி 11 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக் கோப்பையை கையில் வாங்கிய ராகுல் டிராவிட் மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்.

மகிழ்ச்சியில் அவர் துல்லி குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கோப்பையை பெற்ற ராகுல் டிராவிட் சில நொடிகளுக்கு திடீரென குழந்தையாக மாறி சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார். அதுவரை ராகுல் டிராவிட் அப்படி கொண்டாடி யாரும் பார்த்திருக்கவில்லை.

இந்த நிலையில், ராகுல் டிராவிட் தனது ஆக்ரோஷ கொண்டாட்டம் குறித்து முதல் முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

இதுபோன்ற விஷயங்களை திட்டமிட முடியாது. பெரும்பாலான சமயங்களில் நான் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே நினைப்பேன். ஒரு பயிற்சியாளரிடம் அதைத் தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அந்த சமயம், நான் அணிக்காக அதிகம் மகிழ்ச்சி அடைந்தேன்.

பசங்க (வீரர்கள்), உதவியாளர் குழு என் என்னுடன் கடுமையாக உழைத்த அனைவருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் அணியுடன் 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை பயணித்தேன். சில சமயங்களில் கடைசி வரை சென்றிருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் என பல முக்கிய தொடர்களில் இறுதிவரை வந்து, கடைசி கோட்டை எங்களால் கடக்க முடியாமல் இருந்தது.

அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சிறிதளவு அதிர்ஷ்டம் நம் பக்கம் தேவைப்படும். அன்றைய தினம் அது எங்களுக்கு சாதகமாக இருந்தது, என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

google news