Connect with us

Cricket

கம்பீரை பங்கம் செய்த முன்னாள் பாக். வீரர் – என்ன இப்படி சொல்லிட்டாரு?

Published

on

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி இலங்கையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதே வெற்றியுடன் ஒருநாள் தொடரை துவங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியை போராடி சமன் செய்தது. அடுத்தடுத்து விளையாடிய இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

பலரும் இந்திய கேப்டன் ரோகித் தலைமையிலான அணி மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக சாடினர். இந்த வரிசையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்விர் அகமது தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் இந்திய அணியை வசைபாடியுள்ளார்.

இது தொடர்பான பதிவில் அவர், “ஒருநாள் தொடரை தோற்று கவுதம் கம்பீருக்கு இந்திய அணி பரிசு வழங்கியுள்ளது. அடுத்த முறை இந்தியாவிடம் நல்ல அணியை அழைத்து வர சொல்வோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இதனிடையே தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “பவர்பிளேயின் போது அடிக்கக்கூடிய ரன்கள் எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு தெரியும். அதன்பிறகு விக்கெட் ஸ்லோ ஆகும், பந்து ஓரளவுக்கு திரும்பும், ஃபீல்டிங் விரிவடையும் என்று எனக்கு தெரியும். ஆனால் ரிங்கின் வெளியே இருவர் மட்டும் இருக்கும் போது, நாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.”

“நான் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். இவ்வாறு செய்யும் போது பந்துவீச்சாளருக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன்பிறகு 40 ஓவர்களில் தேவையான ரன்களை அடிக்க முடியும். தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு அதிக ரன்களை எடுத்தேன்.”

“பவர்பிளே-வுக்கு பிறகும் அதே போன்ற நிலையை தொடர வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் தவிர்க்க முடியாத வகையில் சில ஷாட்களை அடிக்க முயன்று அவுட் ஆகிவிட்டேன். எனது திட்டம் மிகவும் எளிமையானது, வெளிப்படையானது,” என்று தெரிவித்தார்.

google news