tech news
இந்தியாவில் முதல் tab அறிமுகம்.. மிரட்டிய போக்கோ பிரான்டு..!
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்தது. போக்கோ பேட் 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு புதிய டேப்லெட் 12.1 இன்ச் 2.5K 120Hz LCD ஸ்கிரீன், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் மற்றும் 8GB ரேம் கொண்டுள்ளது.
7.2mm அளவில் மிகமெல்லிய டிசைன் மற்றும் மெட்டல் பாடி கொண்டுள்ள போக்கோ பேட் 5ஜி மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த டேப்லெட் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டூயல் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி, 10,000mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய போக்கோ பேட் 5ஜி மாடல் கோபால்ட் புளூ மற்றும் பிஸ்தாச்சியோ கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8GB+256GB மெமரி மாடல் விலை ரூ. 25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் விற்பனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. அறிமுக சலுகைகளுடன் இதன் விலை ரூ. 19,999 முதல் துவங்கும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட் வாங்குவோர் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 தள்ளுபடி, முதல் நாளில் மாணவர்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.