tech news
₹9K தான்- பங்கம் செய்யப் போகும் டெக்னோ!
டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. டெக்னோ ஸ்பார்க் கோ 1 என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, வெளியீடு மற்றும் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இவை அனைத்தும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
அதன்படி டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டு ரூ. 9000 பட்ஜெட்டில் கிடைக்கும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். இதன் டிசைன், அம்சங்கள், நிறங்கள் அனைத்தும் அதன் சர்வதேச வேரியண்டை போன்றே இருக்கும் என்று தெரிகிறது.
சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் கோ 1 மாடல் 6.7 இன்ச் HD+ 1600×720 பிக்சல் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி615 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ் மற்றும் எல்இடி பிளாஷ், 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டபரி மற்றும் 15W சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் க்லிட்டரி வைட் மற்றும் ஸ்டார்டிரெயில் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும்.