Connect with us

Cricket

டெஸ்ட் கேப்டன்சி.. விராட் கோலி யோசிச்சிருக்கனும்.. முன்னாள் பயிற்சியாளர்..!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வெற்றிகர கேப்டனாக விராட் கோலி திகழ்ந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் வெற்றியை குவித்த கேப்டன்களில் விராட் கோலி நான்காவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கிரீம் ஸ்மித் 53 டெஸ்ட் வெற்றிகளை பெற்றிருக்கிறார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ரிக்கி பாண்டிங் 48 வெற்றிகளோடும், ஸ்டீவ் வாக் 41 வெற்றிகளுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. 2014-15 ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் பதவி விராட் கோலிக்கு வழஙஅகப்பட்டது. டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி மொத்தம் 5,864 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 54.80 ஆகும்.

“தனிப்பட்ட முறையில் அவர் நீண்ட காலம் டெஸ்ட் அணிக்கு கேப்டன் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இந்திய அணிக்கு 65 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் அணி கேப்டனாக இன்னும் நீண்ட காலம் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர் தனது ஃபிட்னஸை கடுமையாக மேம்படுத்தி, தனது உடல்நிலைக்கு சவால் விடுத்துள்ளார். அவர் மிக கடுமையாக பணியாற்றி இருக்கிறார். கேப்டனாக இருந்த போது அவர் அதிகபட்ச ரன்களை குவித்துள்ளார்,” என்று சமீபத்தில் ராவ் பாட்காஸ்டில் பேசிய சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.

 

google news