Connect with us

Cricket

போட்டியின்றி தேர்வு.. இளம் வயது ஐசிசி தலைவர் ஆனார் ஜெய் ஷா

Published

on

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிசி கவுன்சில் தலைவராக ஜெய் ஷா செயல்பட இருக்கிறார். முன்னதாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று கிரெக் பாக்லே தெரிவித்து இருந்தார்.

ஐசிசி தலைவர் போட்டியில் இருந்து கிரெக் விலகிய நிலையில், ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெய் ஷா, சர்வதேச அளவில் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்துவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

“சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டதை தாழ்மையுடன் ஏற்கிறேன். கிரிக்கெட்டை மேலும் உலகறிய செய்வதற்கு ஐசிசி குழு மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன்.”

“கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு வகையான வடிவங்களை சம அளவு முக்கியத்துவம் கொடுத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு எங்களது பிரபல போட்டி தொடர்களை மேலும் பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யும் முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். கிரிக்கெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலமாக்குவதே எங்களது இலக்கு.”

“இதுவரை கற்ற மதிப்புமிக்க பாடங்களை கொண்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதோடு, புதுவகை எண்ணங்களுக்கு வழிகொடுத்து, உலகளவில் கிரிக்கெட் மீதான காதலை பன்மடங்கு அதிகப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அந்த வகையில் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது கிரிக்கெட் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்,” என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *