Connect with us

tech news

மூன்றாக மடிக்கலாம்.. பயங்கர கான்செப்ட் போன் ரெடி.. டீசர் வெளியானது

Published

on

டெக்னோ நிறுவனம் தனது முற்றிலும் புதிய பேண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டது. மிக மெல்லிய டிசைன், மூன்றாக மடிக்கும் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது கான்செப்ட் நிலையில் இருக்கிறது. கையடக்க சாதனத்தில் மிகப்பெரிய டிஸ்ப்ளே வழங்குவதே இந்த சாதனத்தின் நோக்கமாக தெரிகிறது.

புதிய பேண்டம் அல்டிமேட் 2 மாடலில் மிக மெல்லிய அளவிலும், மூன்றாம் மடிக்கக்கூடிய வசதியையும் கொண்டு தனியாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் 11 மில்லிமீட்டர் அளவு தான் கொண்டுள்ளது. முழுமையாக திறக்கப்பட்டால், 10 இன்ச் ஸ்கிரீன் மற்றும் TDDI தொழில்நுட்பம் கொண்டுள்ளது. மடிக்கக்கூடிய சாதனங்களில் இந்த தொழில்நுட்பம் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

இதில் வழங்கப்படும் பேட்டரி கவர் 0.25 மில்லிமீட்டர் அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கவர் அதிநவீன டைட்டன் அட்வான்ஸ்டு ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிக மெல்லிய டிசைன் கொண்ட போதும், உறுதியானதாகும். இத்துடன் இந்த சாதனம் மிக குறைந்த எடை கொண்டுள்ளது.

அளவீடுகளை பொருத்தவரை இந்த மாடல் திறக்கப்பட்ட நிலையில், 6.48 இன்ச் போனாகவும், 10 இன்ச் அளவில் டேப்லெட் போன்றும் பயன்படுத்தலாம். இதில் OLED டச் மற்றும் டிஸ்ப்ளே டிரைவர் இன்டகிரேஷன், 3K LTPO ஸ்கிரீன் மற்றும் 392 PPI ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

முற்றிலும் புதிய டெக்னோ பேண்டம் அல்டிமேட் 2 மாடலின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்த மாடல் கான்செப்ட் வடிவிலேயே உள்ளது. இதன் வெளியீடு பற்றிய தகவல்கள் எப்போது அறிவிக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

டெக்னோ தவிர ஹூவாய் மற்றும் சியோமி நிறுவனங்களும் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

google news