tech news
₹1,299-க்கு AI வசதிகள்.. புது இயர்பட்ஸ் அறிமுகம் – எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. ரியல்மி பட்ஸ் T01 என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ் மிகக் குறைந்த எடை, இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் வரும் இயர்பட்கள் வெறும் 4 கிராம் எடை கொண்டுள்ளன.
இந்த இயர்பட்கள் அனைவர் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தும் அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவை பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த இயர்பட்களில் 12 மில்லிமீட்டர் டைனமிக் பேஸ் டிரைவர்கள் மற்றும் PET டயஃப்ராம்கள் உள்ளன.
இத்துடன் ஏஐ மூலம் இயங்கும் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் அழைப்புகளின் போது மேம்ப்ட்ட ஆடியோ அனுபவம் கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 40mAh பேட்டரி உள்ளது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 400mAh பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது மொத்தம் 28 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இத்துடன் பத்து நிமிட சார்ஜ் செய்தால் 120 நிமிட பிளேபேக் கிடைக்கும்.
புதிய ரியல்மி பட்ஸ் T01 மாடலில் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் ரியல்மி லின்க் ஆப் மூலம் லோ லேடன்சி கேமிங் மோட் வழங்கப்படுகிறது. இத்துடன் கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட், ஸ்மார்ட் டச் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கமாண்ட்கள், ரியல்மி லின்க் ஆப் மூலம் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்Kள் மற்றும் IPX4 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ரியல்மி பட்ஸ் T01 மாடல் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ரியல்மி ஸ்டோர் ஆப், ப்ளிப்கார்ட், அமேசான் வலைதளங்கள் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.