Cricket
லிஸ்ட் பெருசா இருக்கே.. 2 இன்னிங்ஸில் எக்கச்சக்க சாதனைகளை படைத்த ஜோ ரூட்..!
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி கடந்த 29 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்து, புது சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை குவித்தது. இதில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 143 ரன்களை குவித்திருந்தார். இவர் தவிர அந்த அணியின் கஸ் அட்கின்சன் 118 ரன்களை குவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை சார்பில் முதல் இன்னிங்ஸில் கமிண்டு மென்டிஸ் மட்டும் 74 ரன்களை அடித்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வந்த இங்கிலாந்து அணிக்கு பேட்டர்கள் சறுக்கினர். எனினும், ஜோ ரூட் நிதானமாக ஆடி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். 103 ரன்களை எடுத்த நிலையில், இவரும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்களை குவித்தது. இதன் மூலம் அந்த அணி இலங்கைக்கு 483 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் வைத்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களை அடித்த ஒரே வீரர் ஆகியுள்ளார் ஜோ ரூட்.
லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக கிரஹாம் கூச் சாதனையை தகர்த்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஏழாவது சதம் அடித்துள்ளார். இதுவரை எந்த வீரரும் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் இத்தனை சதங்களை அடிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிவேக சதத்தை அடித்து அசத்தினார் ஆனார் ஜோ ரூட். 111 பந்துகளில் ஜோ ரூட் சதம் அடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ஆவது கேட்ச் பிடித்த வீரர் ஆகியுள்ளார். இங்கிலாந்து அணியில் இத்தனை கேட்ச் பிடித்த ஒற்றை வீரராகியுள்ளார் ஜோ ரூட்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை துரத்தும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இலங்கை அணி இன்னும் 430 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம். மறுபக்கம் பந்துவீச்சில் மிரட்டும் பட்சத்தில் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முடியும்.