Cricket
டோனி வெயிட்டு தான்.. ஆனா எப்பவும் அதையே சொல்ல முடியாது – இந்திய அம்பயர் பளீச்
சர்வதேச கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி பயங்கரமான மூளைக்காரர் என்று அனைவருக்கும் தெரியும். போட்டிகளின் போது அசாத்திய முடிவுகள் எடுப்பது, மிக கச்சிதமாக ஃபீல்டிங் வைப்பது என எம்எஸ் டோனி அனைத்திலும் சிறந்து விளங்கினார். எம்எஸ் டோனி எல்லா முறையும் சரியான முடிவுகளை எடுத்தார் என்று கூறிவிட முடியாது என இந்திய அம்பயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
களத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் டிஆர்எஸ் விதியை சரியாக பயன்படுத்தக்கூடியவராக எம்எஸ் டோனி அறியப்படுகிறார். டிஆர்எஸ் முடிவுகள் எம்எஸ் டோனிக்கு பலமறை வெற்றிகரமாக அமைந்து இருக்கிறது. இதனாலேயே டோனி ரசிகர்கள் டிஆர்எஸ்-ஐ டோனி ரிவ்யூ சிஸ்டம் என்றும் குறிப்பிட்டு வந்தனர்.
எம்எஸ் டோனி டிஆர்எஸ்-ஐ எடுக்கிறார் எனில், அம்பயர் தனது முடிவை மாற்றுவர். இந்த நிலையில், முன்னாள் அம்பயரான அனில் சவுத்ரி எம்எஸ் டோனி டிஆர்எஸ் எடுப்பது பற்றி கூறியுள்ளார்.
“எல்லா சமயமும், டோனி சரியாக இருந்தார் என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர் டிஆர்எஸ்-இல் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். போட்டி குறித்து அவரிடம் நிறைய யுத்திகள் உள்ளன. துவக்கத்தில் இருந்ததை விட ரிஷப் பண்ட் தற்போது அதிகளவு முன்னேறியுள்ளார். இது அனுபவம் சார்ந்தது, ரீபிளேக்களை அதிகளவு பார்த்து, முடிவுகளை பரிசீலனை செய்ய வேண்டும்.”
“விக்கெட் கீப்பர்கள் பந்தை சரியாக பார்ப்பதற்கு ஏற்ற இடத்தில் இருப்பார்கள். அவர்கள் ஒரே இடத்தில் இருந்து அசையாமல் பந்து எப்படி வருகிறது என்பதை பார்ப்பார்கள். சமயங்களில் அம்பயர்கள் விக்கெட் கீப்பர் அசைவுகளை பார்த்தும் முடிவுகளை எடுப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் விக்கெட் கீப்பர்கள் தொடர்ச்சியாக பந்தின் மீது பார்வையை வைத்திருப்பார்கள் என்பது தான்.”
“எம்எஸ் டோனி எப்பவும் உண்மை முடிவுக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார். பல சமயங்களில் அவர் மற்றவர்களை அப்பீல் கேட்க வேண்டாம் என்று தடுத்துள்ளார். களத்தில் ஏழு மணி நேரம் வரை இருப்பார் எனில் அவர் சிறந்த அம்பயராக உருவாகலாம்,” என்று தெரிவித்தார்.