Connect with us

Cricket

என் அப்பா ஒரு மென்டல் – யுவராஜ் சிங் பேசிய வீடியோ வைரல்

Published

on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி குறித்து, யுவராஜ் சிங் யோகராஜ் சிங் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இவரது குற்றச்சாட்டுகள் புயலை கிளப்பியுள்ள நிலையில், யுவராஜ் சிங்கின் பழைய கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, யுவராஜ் சிங் தனது தந்தைக்கு மனநல பிரச்சினை இருப்பதாக கூறும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக யுவராஜ் சிங்-இன் தந்தை எம்எஸ் டோனி தன் மகனுக்கு செய்ததை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தான் யுவராஜ் சிங் பேசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் சிங், “என் தந்தைக்கு மனநல பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் பேச வேண்டிய வேறு சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை அவர் ஏற்க மாட்டார்,” என்று கூறியுள்ளார்.

இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் டோனி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி உள்ளனர். ஒருகட்டத்தில் யுவராஜ் சிங் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் யுவராஜ் சிங் துணை கேப்டனாக இருந்த நிலையில், அதன்பிறகு எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணியிலும் யுவராஜ் சிங் துணை கேப்டனாக இருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங், “என்னால் எம்எஸ் டோனியை மன்னிக்கவே முடியாது. அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர், ஆனால் அவர் என் மகனுக்கு செய்தது, எல்லாமே இப்போது அம்பலமாகிறது. அவரை என் வாழ்நாள் முழுக்க மன்னிக்கவே மாட்டேன்,” என்று தெரிவித்தார்.

google news