latest news
மழை வரப்போகுதாமே!…அலெர்ட்டா இருக்கனுமா அப்போ?…
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெரு நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் , மாலை நேரத்தில் மட்டுமே இதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
நாளைய தினம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகயிருப்பதாகவும், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு மேல் வழி மண்டல சுழற்சி நிலவுவதாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கக் கூடிய வட மேற்கு வங்கக்கடலில் நாளைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்.
மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடனே காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லியிருக்கிறது.
மேற்கு திசை காற்றுடன் ஒன்றிணையும் போது பெரும்பாலும் மாலை நேரங்களில் மட்டுமே மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இந்த மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், நாளை உருவாகும் என எதிர்பார்க்ககூடிய காற்றகழுத்த தாழ்வு பகுதியினுடைய நகர்வின் அடிப்படையிலேயே மழைக்கான வாய்ப்புகள் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியிருக்கிறது.