Connect with us

latest news

ஆன்மீக சொற்பொழிவாளருக்கு ரெடியான ஆப்பு?…கைது செய்யப்பட்டு விசாரணை!…

Published

on

Mahavishnu

முன் ஜென்மம், மறு பிறவி, பழி,பாவங்கள் குறித்த சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக சொல்லப்படும் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் சைதாப்பேட்டை போலீசார். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய நிலையில் அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து விசாரணை நடத்த அழைத்துச் சென்றனர் காவல் துறையினர்.

சென்னை அசோக் நகர் பள்ளி விழா ஒன்றில் மாணவர்களை உதவேகப்படுத்தும் விதமாக பேச அழைக்கப்படிருந்தார் பேச்சாளர் மகாவிஷ்ணு. நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை பொறுத்துத்தான் இந்த ஜென்மத்தின் பிறப்பு வகுக்கப்படுகிறது என பேசினார்.

அப்போது அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பார்வை மாற்றுத்திரனாளி சங்கர், மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால் நிகழ்ச்சி மேடையில் சிறிது நேரம் குழப்பமான நிலை காணபட்டது.

பின்னர் மாற்றுத்திரனாளி ஆசிரியர் சங்கரை அவமதித்ததாக பேச்சாளர் மகாவிஷ்ணுவின் மீது கடுமையான கண்டங்கள் எழுந்தது.

mahavishnu

mahavishnu

இந்த விவகாரம் குறித்த பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இது குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என சொன்னார்.

இதற்கிடையில் அனைத்து வகை மாற்றுத்திரனாளிகள் சங்கம் மகா விஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திரனாளி ஆசிரியர் சங்கரை இழிவுபடுத்தியதாக புகார் தெரிவித்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர் சைதாப்பேட்டை போலீஸார். மாற்றுத்திரனாளிகளை அவதூறாகப் பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவுவாளர் பேசியதை அடுத்து எழுந்த சர்ச்சையால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news