latest news
பதினேழாம் தேதி வரைக்கும் பெய்யப்போகும் மழை?… ஆய்வு மையம் கொடுத்த டிப்போர்ட்…
தமிழகத்தின் வானிலை குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம். இதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியிகல் வருகிற பதினேழாம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற பதினேழாம் தேதி வரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும், அதிக வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பு நிலையை விட்டு மாறும் சூழல் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது.
மன்னார் வளைகுடா தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என தனது அறிவுறுத்தலை வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியிருக்கிறது.
இதைப்போல அதிக பட்ச வெப்ப நிலை முப்பத்தி ஐந்து முதல் முப்பத்தி ஆறு டிகிரி செல்ஸியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை இருபத்தி ஏழு முதல் இருபத்தி எட்டு டிகிரியை ஒட்டியும் இருக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்துள்ள செய்தி அறிக்கையில்.