india
அவசரமில்ல…ஆதார் ஆணையம் கொடுத்துள்ள அடுத்த அறிவிப்பு!…
ஆதார் கார்டு புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது ஆதார் ஆணையம். மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் புதுப்பித்தலுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை நீட்டியுள்ள ஆதார் ஆணையம், மாற்றப்பட்டுள்ள தேதி குறித்த அறிவிப்பினையும் சொல்லியிருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டையை இது வரை புதுப்பிக்காமலேய இருந்து வந்தவர்கள், தங்களது ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள இம்மாதம் (செப்டம்பர்) பதினான்காம் தேதிக்குள் (14ம் தேதி) இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆதார் ஆணையம் அறிவித்திருந்தது.
குறிப்பிட்ட இந்த தேதிக்குள் புதுப்பித்தலை மேற்கொள்பவர்கள் இலவசமாக இதனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. இதற்கான இணைய தள முகவரியும் சொல்லப்பட்டிருந்தது. இதனால் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை குறையும் எனவும் சொல்லியிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் பதினான்காம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த இந்த கால அவகாசத்தை இந்த வருட இறுதியான டிசம்பர் மாதம் பதினான்காம் தேதி (14ம் தேதி) வரை நீட்டி அறிவித்துள்ளது.
இந்த கால அவகாச நீட்டிப்பினால், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டையில் புதுப்பித்தலை இதுவரை மேற்கொள்ளாத நபர்கள் இந்த வாய்ப்பினை முறையே பயன்படுத்தி நீட்டித்திக்கொள்ளலாம்.
இந்த தேதி மாற்றம் மற்றும் கால அவகாச நீட்டிப்பின் மூலம் பயன்பெறும் பயணாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான தனி நபர் அடையாளச் சான்றாக மாறியுள்ள நிலையில், ஆதார் அட்டைகள் வைத்திருப்பவர்கள் மத்திய, மாநில திட்டங்களால் பயன் பெற முடியும்.