Cricket
ரெக்கார்டு பிரேக்கிற்கு ரெடியாகும் கோலி…ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா?…
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகளாவிய சாதனைகள் படைத்த வீரர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராத் கோலி.
சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்ப யார் வருவார்? என ஒட்டு மொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் கவலையோடும், ஏக்கத்தோடும் காத்து நின்ற நேரத்தில் அவதாரம் போல மைதானத்தில் எதிரணி வீரர்களின் பந்து வீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்து தும்சம் செய்த வருபவராக கிரிக்கெட் போட்டிகள் களத்திற்கு வந்து சேர்ந்தார் விராத் கோலி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மூன்று விதாமான பரிணாமாங்களிலும் சாதனை மேல் சாதனைகளை செய்யத்துவங்கினார் விராட் கோலி. களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களை எந்த நேரத்தில் என்ன விஸ்வரூபம் எடுப்பாரோ என்ற அச்சத்தோடே கதிகலங்கி நிற்கச் செய்வதில் வல்லவராகவே தொடர்ந்து வருகிறார்.பல மைல் கற்களை எட்டியுள்ள இவருக்கு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலும் இரண்டு சாதனைகளை செய்து முடிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இன்னும் ஐம்பத்தி எட்டு ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களை அதி வேகமாக கடந்த உலகின் முதல் வீரராகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி விடுவார் இவர்.
சர்வதேச அளவிலான இந்த சாதனையை செய்ய வங்கதேசத்திற்கு எதிராக சரியான வாய்ப்பு உருவாகியுள்ள அதே நேரத்தில் வெறும் நூற்றி ஐம்பத்தி இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களைக் கடக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை மிக்க இலக்கை அடைவதற்கு.
டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச தரத்தில் சற்று பின் தங்கிய நிலையில் இருக்கும் வங்கதேசம் போன்ற அணிக்கு எதிராக விராத் கோலி போன்ற தரமிக்க வீரருக்கு பெரிய விஷயமல்ல என்பதுவே உலகெங்கிலும் உள்ள கோலியின் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற பத்தொன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது.