Connect with us

latest news

காமராஜரின் தோல்விக்கு காரணம் இது தான்…சீமான் சொன்ன விளக்கம்…

Published

on

kamarajar

மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் காமராஜரின் தோல்விக்கான காரணம் இதுவே எனச் சொன்னார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் தாய்மொழியை மீட்டெடுக்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சொன்னார். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

அதே போல உலகில் எல்லா மொழிகளும் மனிதால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று மட்டும் தான் இறைவனால் பாடப்பட்டது. கீழடியில் இரண்டு ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் தோண்டி ஆய்வு நடத்த வேன்டும் அப்போது தான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும் என்று பேசினார்.

Seemaan

Seemaan

நான்காம் தமிழ்ச் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவருக்கு மரப்பாச்சி பொம்மை அளவில் தான் மதுரையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லோருக்கும் சிலை இருக்கிறது, ஆனால் வேலு நாச்சியாருக்கு சிலை இல்லை என்றார்.

பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். அதே போல தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள தமிழர்களுடம் தமிழின் பெருமையை பேசுகிறார்.

ஆனால் தமிழகத்தில் என்றாவது பேசியது உண்டா? என கேள்வி எழுப்பினார். காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல, தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று தான் என்றும் சீமான் பேசி இருந்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *