Cricket
ரோகித் சர்மா அவர் மாதிரியெல்லாம் பயிற்சி செய்ய மாட்டார்.. முன்னாள் மும்பை அணி பயிற்சியாளர் விளாசல்
ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளில் உச்சத்திலேயே இருந்து வந்துள்ளது. மிடில்-ஆர்டர் பேட்டராக துவங்கிய இவரது கிரிக்கெட் வாழ்க்கை தற்போது அதிரடி துவக்க ஆட்டக்கரர் மற்றும் இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் என தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளை எட்டிவருகிறது.
கிட்டத்தட்ட 8000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்திய அணி மட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா வெற்றி வாகை சூடியுள்ளார். இவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்று குவித்துள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரில் மட்டும் ரோகித் சர்மா கிட்டத்தட்ட 6500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இத்தனை சாதனைகள் இருந்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் ரோகித் சர்மா குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
“அதாவது அவர் இன்னும் மாறவே இல்லை. இது மிகவும் அபத்தமாக இருக்கிறது. பேட்டிங் செய்ய வரும்போது அவரது நடையை நான் கவனிக்கிறேன். இதேபோன்று அவர் வலைபயிற்சிகளில் த்ரோ-டவுன்கள் அடிக்கும் போதும் பார்க்கிறேன். அது கம்பீரமாக இருக்கிறது.”
“அவர் சச்சின் டெண்டுல்கரை போல் கடுமையாக பயிற்சி செய்யவில்லை. அது மட்டும் நிச்சயம். சில நேரங்களில் அவர் நெட்ஸில் இருந்து விலகி பயிற்சி செய்கிறார். அவரது தொழில்நுட்ப திறன் மற்றும் அவருக்கு சிறந்த நுட்பம் இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என ஜாண்டி ரோட்ஸ் சமீபத்தில் அளித்த பாட்காஸ்ட் பேட்டியில் தெரிவித்தார்.