Connect with us

india

வேற லெவல் வசதிகளோடு வெளியான வீரோ…மகேந்திராவின் அடுத்த கமர்ஷியல் வாகனம்…

Published

on

இந்தியாவில் சாலைப்போக்குவரத்துக்கான வாகனங்கள் தயாரிப்பத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது மகேந்திரா நிறுவனம். பேசஞ்சர் வாகனகள், சொகுசு வாகனங்கள் தயாரிப்போடு மட்டுமல்லாமல் கமர்ஷியல் வெகிக்கில்களையும் இந்திய சாலைகளுக்கு ஏற்றார் போல வடிவமைத்து வழங்கி வருகிறது இந்நிறுவனம்.

இந்த நிறுவன கமர்ஷியல் வாகன வகைகளின் அடுத்த தயாரிப்பான “வீரோ”  இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 1493 சிசி திறன் கொண்ட இஞ்சினாக வடிவமைக்கப்பட்டுள்ளது “வீரோ”.

Veero

Veero

3சிலின்டர்களை உள்ளடக்கியுள்ளது மகேந்திராவின் புதிய அறிமுகமான் “வீரோ”.

டீசலில் இயங்ககூடிய இந்த வாகனம் சரக்குகளை ஏற்றிச்செல்லக்கூடிய கமர்ஷியல் வெகிக்கில் வகையில் சேர்ந்து விடும்.  மகேந்திராவின் சொகுசு வாகனமான ‘பொலீரோ நியோ’வின்  எஞ்சின் போலவே ‘வீரோ’ இஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமர்ஷியல் வாகனங்களின் கேபினில் 3 பேர் அமர்ந்து செல்லுக் கூடிய விதமாக “வீரோ” வடிவமைக்கப்பட்டுள்ளது. கியர் செலக்டர் ராடு முன் புற டேஷ் போர்டிலேயே கொடுக்கப்பட்டள்ளதால் மூன்று பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கு விதமான வசதி மகேந்திராவின் “வீரோ”வில் வழங்கப்பட்டுள்ளது.

மைலேஜை பொறுத்த வரை லிட்டர்ருக்கு பதினெட்டு கிலோ மீட்டர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. 1.5 டன் எடையை சுமக்கும், 1.6டன்  வரையான எடைகளை சுமக்கும் வாகனம் என பயனாளிகளின் வசதிக்காக வேரியன்ட்ஸ்களாக  சந்தையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளதாக “வீரோ” குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் சொல்லுகிறது.

இதற்கு முன் வெளியான மகேந்திராவின் மற்ற லோடு வாகனங்களின் வசதிகளை விட அதிகமான ஃப்யூட்சர்கள் வழங்கப்பட்டுள்ளது. நவீன மயனமயான முன்புற கேபின் வசதிகளோடு இந்திய சந்தையில் “வீரோ”வை அறிமுகப்பட்டுத்தியுள்ளது மகேந்திரா நிறுவனம். முழுக்க, முழுக்க டிஜிட்டல் மயமான வசதிகளோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மகேந்திராவின் “வீரோ”.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *