Connect with us

latest news

விரைவில் மலரப்போகும் ஒன்றிணைந்த அதிமுக…ஓ.பி.எஸ் நம்பிக்கை…

Published

on

ops

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரைவில் ஒன்றுபடும் என நம்பிக்கை தெரிவித்தார். அதையே தான் தமிழக மக்களும் விரும்புகிறார்கள் என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வந்தது. ஜெயலலிதாவால் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்கும், முன்னாள் முதல்வராகிய எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மனக்கசப்புகள் நீடித்து வந்தது.

ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார். அதிமுகவிற்கு தனக்கும் உள்ள உறவை நீட்டிக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை கூட கையில் எடுத்தார் பன்னீர் செல்வம்.

sasikala ttv eps

sasikala ttv eps

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி மூன்றாவது இடத்தை பிடித்தார் ஓபிஎஸ். அதோடு அதிமுக ஒன்று பட வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்தார் பன்னீர் செல்வம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் அதிமுகவை எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் தொடங்கினாரோ. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினாரோ அதனை நிறைவேற்றும் வகையில் தொண்டர்கள் அனைவரும் இணைந்து புதிய சகாப்தத்தை எழுதுவார்கள்.

ஒன்றிணைந்த அதிமுக விரைவில் மலரும், அதிமுக மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதையே ஒட்டு மொத்த தொண்டர்களும், பொது மக்களும் எதிர்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள், அனைவரும் இணைகிற கால வெகு தூரத்தில் இல்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் அதிமுக மீண்டும் உருவெடுக்கும் என சொல்லியிருந்தார் பன்னீர் செல்வம்.

google news