தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து ஒரு வெற்றி கூட இல்லை.. யார் பேச்சையும் கேட்பதில்லை.. எத்தனை பேர் போனாலும் போகட்டும், நான் ஒருவன் போதும் என்ற இறுமாப்பு.. கட்சியில் உள்ள எல்லா நிர்வாகிகளையும் அனுப்பிவிட்டு மகனுடன் மட்டும் அரசியல் செய்ய போகிறாரா எடப்பாடியார்.. கட்சியே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் வெறும் பொதுச்செயலாளர் பதவியை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்?
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, கட்சி தொடர் சரிவுகளையும் தேர்தல் தோல்விகளையும் மட்டுமே சந்தித்து வருவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமையின்