Connect with us

latest news

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

Published

on

Thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கும் என்ற அறிவிப்பு வெளியானது.

இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சிறுத்தை சிறுத்துப் போய் விட்டது என திருமாவளவனை விமர்சித்திருந்தார்.

Tamilisai

Tamilisai

அதோடு மது ஒழிப்பு கொள்கையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார் என்றும், எப்போதும் போல நடக்கவில்லை என்று தெரிந்தது மத்திய அரசு மீது மடையை மாற்றுகிறார் என திருமாவளவன் மீது தனது காரசாரமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன்.

தமிழிசையின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய திருமாவளவன், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற விரக்தியில் பேசிவருகிறார்கள் எனவும், கூட்டணியில் மேலும் விரிசல் விழாதா? என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை.

சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் பதினெட்டு மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் கணக்கு, கூட்டணிக் கணக்கு போடப்பட்டது நடக்கவில்லை என்பதன் விளைவாக அவர்களின் கூக்குரல், புலம்பல் இது எனவும் திருமாவளவன் பதிலளித்தார்.

ஆளும் கட்சியாக இருந்த போதும் மது ஒழிப்பு மா நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்க இருப்பது விசிகவும், திமுகவும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை குறிக்கிறது என்றார். மேலும் பாஜகவிற்கு பெரியார் என்றாலே பிடிக்காது, தமிழக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே நான் உச்சரிக்க மாட்டேன் என சொல்லியதை சுட்டிக்காட்டி பேசிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

google news