Cricket
INDvsBAN டெஸ்ட்: ஸ்பின்-க்கு சாதகமான பிட்ச், 3 ஃபாஸ்ட் பவுலர்களை களமிறக்கிய இந்தியா – ஏன் தெரியுமா?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிது. பந்துவீச்சு கேட்ட வங்கதேசம் அணி இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து, டாப் ஆர்டரை ஆட்டம் காண செய்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு சாதகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக இந்திய பந்துவீச்சில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு டுவிஸ்ட் கொடுக்கும் வகையில், இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியின் இந்த முடிவு அனைவர் மனதிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
எனினும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணியின் முடிவு இந்த போட்டியை கடந்து எதிர்கால திட்டமிடல் மற்றும் பயிற்சி ஆகியவற்றை சார்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளம் செம்மண் அதிகளவில் கலந்திருக்கும். இது ஏராளமான பவுன்ஸ்-ஐ வெளிப்படுத்தும். இது இந்திய வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.
பவுன்ஸ்-க்கு இந்தியாவில் தயாராகும் போது, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு பழகியிருக்கும். ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். இந்த நிலையில், தற்போது முதல் பவுன்ஸ் அதிகமுள்ள ஆடுகளங்களில் பந்துவீசும் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்க முடியும்.
இதை கருத்தில் கொண்டு தான் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி விளையாடி வருகிறது.